Pages

Powered by Blogger.

வா என் வண்ண நிலவே - 13

தனது செல்போனை எடுத்து அவளிடம் காட்டினான் .
அவள் போட்டோ
தான் ...அன்று எடுத்ததுதான் விதவிதமாக எடுத்திருந்தான் .

அதன் பிறகு உன் கண்ணில் பட வேண்டுமென்றுதான் அன்று உன் முன்னால் குதிரையில் வந்தேன் .

அதன் பின் நீ சென்ற ஒவ்வோர் இடத்துக்கும் பின் தொடர்ந்து வந்து போட்டோ எடுத்தேன் .

நித்யனின் போன் முழுவதும் எழில்நிலாவின் போட்டோக்களால் நிரம்பி வழிந்தது .

பூங்காவில் அந்த பாம்பு உன் புறம் தலை திருப்பியதே ...என் இதயமே
ஒரு நிமிடம நின்று விட்டது தெரியுமா ?..

கனவில் மிதப்பது போன்ற தோற்றத்திலேயே இன்னமும் நின்று கொண்டிருந்தாள் எழில்நிலா .

உன்னிடம் காதலை சொல்லி விட துடித்துக்கொண்டிருந்த சரியான சமயத்தில் திடீரென்று நீ காணாமல் போனாய் .

விசாரித்ததில் உன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதது தெரிய வந்தது .அவரின் உடல்நிலையை விசாரித்தபடியே இருந்தேன் .
அவர் சரியாகி உனக்கு மாப்பிள்ளை பார்ப்பது தெரிந்ததும் நானே மாப்பிள்ளையாக வந்தேன் .

பிரமிப்புடன் கேட்டபடி இருந்தாள் எழில்நிலா .உண்மையா ? இதெல்லாம் நிஜமா ? நிஜமென்றுதான் கூறியது அவன் மீசை முடியின் சிறு பிசிறலை கூட  பார்க்க முடியக்கூடியதான அவன் அருகாமை .
"ஆனால் எனக்கு உன் மீது மனவருத்தம் .உனக்கு ஒரு சங்கடம் வரும்போது என்னை தேட வேண்டாமா ?...உன் தந்தையின் உடல்நிலைக்காக என் ஆறுதலை எதிர்பார்ப்பாய் என ஒவ்வொரு நிமிடமும் என் போனில் எதிர்பார்த்தபடி" இருந்தேன் ....

நீ கவலையில் இருக்கையில் நானே போன் "போடுவதில் தயக்கம் .மேலும் நாம் நமது அன்பை உறுதிப்படுத்துக் கொள்ளவும் இல்லை .எனவே என் அளவு அன்பு உனக்குமிருந்தால் நீயே என்னை தொடர்பு கொள்வாய் என இருந்தேன் ."

இவ்வளவுதான் ...நடந்ததை எல்லாம் சொல்லி விட்டேன் .இனி நீ ...என்றபடி அவள்புறம் கையசைத்தான் ....

கண் இமைக்காமல் அவனின் அன்பை ,அளவில்லா காதலை ,தனை ஆளத்துடிக்கும் ஆளுமையை விழி விரிய கேட்டுக்கொண்டிருந்த எழில்நிலாவுக்கு ,தான் எதற்காக நித்யனை தவிர்த்தோம் என்பதே மறந்து விட்டது .

தன் மன எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் எனக்குள் அச்சுக்கோர்க்கிறானே ...இவனையா நான் விலக நினைத்தேன் .அப்படி என்ன காரணம் இருக்க கூடும் எனக்கு இவனை பிரிய ....
இந்த ரீதியில் யோசிக்க ஆரம்பித்த எழில்நிலா ...

என்ன இந்த மரமண்டைக்கு  எதற்கு இப்படி செஞ்சோம்னு புரியலையா ?...விடுடா ...நமக்கு வாழ்நாள் பூராவும் இருக்கிறது .இதை பிறகு நிதானமாக பேசிக்கொள்ளலாம் .இப்ப நம் இருவருக்குமே பிடித்த மாதிரி ஒரு வேலை செய்யலாமா செல்லக்குட்டி ...?"என்றுரைத்தபடி நித்யன் அவள் கன்னத்தை வருட ,

ஆழ்ந்து கொண்டிருந்த மாயப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள் எழில்நிலா .
கூடவே அவனை விட்டு விலகி நிற்க' இறுகியது நித்யன் முகம் .

ம் ..சொல்லு ...

குட்டி ...

நீங்க சென்னைல யாரையோ லவ் பண்றது எனக்கு தெரியும் .அது எனக்கு தெரியக்கூடாதுன்னுதானே என்னை இங்க அத்தை மாமா கூட குடித்தனம் வச்சுட்டு நீங்க மட்டும் சென்னை போக திட்டம் போட்டீங்க
என்றாள் .

நித்யனுக்கு தலையிலடித்து கொள்ளலாம் போலிருந்தது.
 பிடிக்கலைன்னா நேரடியா சொல்லிடு .அதை விட்டுட்டு நீயா யோசித்து யோசித்து எதையாவது பேசாதே ."

"இங்க உன்னை இருக்க வைக்க நினைச்சதே உனக்காகத்தான் "என்றான் .

என்னது ..எனக்காகவா ..?

ஆமா ..நீதானே சொன்ன இந்த கொடைக்கானல் உனக்கு ரொம்ப பிடிக்குது .இங்க நிரந்தரமாக இருக்கிறவங்க அதிர்ஷ்டசாலி ன்னு .அதனாலேதான் இந்த யோசனை செய்தேன்" .என்றான் .

ஆம் அவள் அப்படி சொன்னது உண்மைதான் .ஆனால் அதற்காக அவனை பிரிந்து தங்கும் அளவுக்கு இந்த ஊர் அவளுக்கு முக்கியமா என்ன ?...

அம்மாவுக்கு கூட இந்த ஏற்பாடு பிடிக்கலை .போகும்போது உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போயிடுன்னுதான் சொல்லிக்கிட்டுருக்காங்க என தொடர்ந்து சொன்னான் .

அம்மா ...சட்டென மாமியாரின் கண்டிப்பு நினைவு வந்தது .

உங்கம்மா ரொம்ப கண்டிப்பா இருக்காங்களே. ..என்னால் அவுங்க கூட இருக்க முடியும்னு தோணலை ..என்றாள் எழில்நிலா .

வேணாமே.... என்றான் இலகுவாக நித்யன் .நீ இங்கே இருப்பதில் அம்மாவுக்கே விருப்பமில்லை என்று சொன்னேனே ...அம்மா வெளிப்பார்வைக்க்கு கண்டிப்பாக தெரிவாங்க .ஆனால் ரொம்ப நல்லவங்க ...என்றான் நித் யன் .

இங்கே பார் நிலா ...நீ முட்டாளல்ல .எனக்கு தெரியும் .என் அன்பை நீயும் உணர்ந்துதான் இருந்தாய் .அதுவும் எனக்கு தெரியும் .பிறகும் ஏன் உனக்குள் இந்த குழப்பம் .உன்னையே உனக்கு உணரவிடாமல் தடுப்பது எது ..?"எனக்கேட்டான் .

முகத்தை மூடிக்கொண்டு விம்மி விட்டாள் எழில்நிலா ...

"ஏன்னா நீங்க ரொம்ப அழகு .நான் ...நான் சுமாரா இருக்கேன் ..அ .அதான்" என்று திக்கி திணறினாள் .

"அப்படியே அறைஞ்சேன்னா பல்லு பூராவும் பொல பொலன்னு உதிர்ந்திடும் .எவன்டி சொன்னான் நீ அழகா இல்லைன்னு .கறுப்பு அழகில்லைன்னு சொல்றவன் கண்டிப்பாக முட்டாளாத்தான் இருப்பான் .எனக்கு நீ தேவதை மாதிரி ,வானில் மிதக்கும் நிலவு மாதிரி ,கண்கள் சிமிட்டும் நட்சத்திரம் மாதிரி தெரியுற ...போதுமா .".என்றான் .

ஆனால் தெளிவடையாத தன் மனைவியின் முகத்தை பார்த்தவன் ,மெல்ல அவள் தலையை வருடி "என்னடா என்ன பிரச்சினை உனக்கு ?" என்றான் மென்மையாக .

சட்டென அவன் மார்பில் சரிந்து விம்ம தொடங்கியவள் ,தன் மனதை மெல்ல திறக்க தொடங்கினாள் .

சிறு வயதிலிருந்து தான் சந்தித்த நிறம் சம்பந்தமான பேச்சுக்களை சொன்னவள் ,இறுதியாக தனக்கு வந்த கறுப்பு வானவில்லே ..கடிதம் வரை சொல்லி நிறுத்தினாள் .

"எவனோ ஒரு தெருப்பொறுக்கி கவிதைங்கிற பேர்ல புலம்பினதுக்கா இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க ?"என்றான் ஆத்திரத்துடன் .

இல்லையென தலையசைத்தவள் "இவர்களெல்லாம் வெளியாட்கள் ,இவர்கள் பேசும் போது சிறிது கஷ்டமாக இருந்தாலும் உடனே மறந்துவிடுவேன் ."

ஆனால் இப்படி மற்றவர்கள் பேசுவதை தடுத்து "என் தங்கம்" என எப்போதும் கொஞ்சும் அப்பா அம்மாவே ,ஒருநாள் நானிருப்பது தெரியமல்" எழில் கறுப்பா போயிட்டா ,அவளுக்கு கல்யாணம் பண்ணும்போது கொஞ்சம் க ஷ்டப்படணுமே" என பேசிக்கொண்டிருந்தனர் .

தாங்க முடியா பாரம் தாங்கும் உணர்வு அந்த பேச்சில் வெளிப்பட்டது.

அன்றிலிருந்து என் நிறம் பற்றிய தாழ்வுமனநிலை என்னனுள் வேரூன்றி விட்டது "என்றாள் .

"என்ன நிலா இது உங்க அப்பாம்மா பற்றி உனக்கு தெரியாதா ?..".என்று கேட்டான் நித்யன .

தெரியும் நித்யன் ..ஆனால் அப்பாவும் அம்மாவும் இப்படி சிறிது கவலை கொண்டு பேச என் நிறம் ஒரு காரணமாகி விட்டதே என்ற கவலை எனக்கு எப்போதும் உண்டு" என்று தன் நிலை சொன்னாள் .

"ஊரில் யார் சொன்னாலும் அது என்னை பாதிக்காது .ஆனால் எனக்கு உயிர் கொடுத்தவர்கள் ...என் உயிருக்கு உயிராய் நான் நினைப்பவர்கள் ...என்னை என் நிறத்தை பேசினால் ..."

திடுக்கிட்டான் நித்யன் .

நானா ..? என்னையா சொல்ற ?..வியப்புடன் கேட்டான் .

பதில் கூறாமல் அவனை வெறித்தாள் எழில்நிலா .

"நிலா ப்ளீஸ் சொல்லு ...என் மனதில் உன் நிறம் பற்றிய குறை எப்போதும் வந்ததில்லை ..நான் கண்டிப்பாக சொல்லவேயில்லை "என்றான் பரிதவிப்புடன் .

சொன்னீங்க "என்றாள் கண்ணீருடன் "அன்னைக்கு சொன்னீங்க ...நான் என் காதால் கேட்டேன் ..".

எனக்கு கறுப்புன்னா பிடிக்காதுன்னு சொன்னீங்க ...வேற வழியில்லாமல் இந்த கறுத்த குட்டியை மேய்ச்சுக்கிட்டு இருக்கேன்னு சொன்னீங்க ...எனக்காக என் வெள்ளை தேவதை காத்துக்கிட்டு இருக்குன்னு சொன்னீங்க ..."

இதனை எழில்நிலா சொல்லும்போது ஒரு விக்கல் விசும்பல் இல்லை ...ஒரு மாதிரி மரத்துப்போன குரலில் கூறினாள் .

ஆனால் கேட்டுக்கொண்டிருந்தவனோ கடகடவென சிரிக்க தொடங்கினான் .அடக்க முடியாமல் விழுந்து விழுந்து மீண்டும் மீண்டும் சிரிப்பு ...சிரிப்பு ...சிரிப்பு ...

கோபமாக பார்க்கும் எழில்நிலாவை கைபிடித்து இழுத்து சென்றவன் அழைத்து சென்ற இடம் வீட்டின பின்புறமுள்ள  கொட்டடி .

அங்கே நின்றிருந்தது அந்த கறுப்பு குதிரை ...கம்பீரமாய் ...

"நான் சொன்ன குட்டி இதுதான் .....எனக்கு குதிரையேற்றம் ரொம்ப பிடித்த விளையாட்டு ...

வெள்ளை குதிரை எனக்கு ரொம்ப
பிடிக்கும் .சென்னைல ஒரு வெள்ளை குதிரை வாங்கி வைத்திருக்கிறேன் .
எனக்காக சென்னையில் காத்திருக்கும் தேவதை அதுதான் .

திருமணத்திற்காக ஒரு மாதம் இங்கேயே தங்கி விட்டதால் என் தங்கையின் வீட்டில் அதனை விட்டுவிட்டு வந்தேன் .அது என்னை ரொம்பவே தேடுறதா என் தங்கை சொன்னாள் .

இங்க கூட முதல்ல ஒரு வெள்ளை குதிரைதான் வச்சிருந்தேன் .ஆனா ஏதோ நோய் வந்து அது செத்து போச்சு .இந்த கறுப்புகுதிரை வாங்கி ஆறு மாதம்தான் ஆகுது .

நல்ல ஜாதி குதிரைல வெள்ளை கிடைக்காததால  இதை வச்சிக்கிட்டு இருக்கேன் ....போதுமா விளக்கம் "என்றான் நித்யன் இப்போதும் பொங்கி வரும் சிரிப்பை அடக்கியபடி ...

இரண்டு கைகளையும் தனது தலை மீது வைத்து நீண்ட மூச்சொன்றை வாய் வழியே வெளியேற்றிய எழில்நிலா அப்படியே தரை மீது சரிந்து அமர்ந்தாள் .

கண்களை மூடி சிறிது நேரம் இருந்து நித்யனின் பேச்சுக்களை உள்வாங்கி ஜீரணித்தாள் .

உடல் தளர்ந்து அமர்ந்திருந்தவளை கனிவோடு நோக்கிய நித்யன் சில நிமிடங்கள் அவளை அவள் போக்கில் விட்டான் .

பின் மென்மையாக தோளணைத்து எழுப்பியவன் ,"இந்த முட்டாள்தனத்துக்கு உன்னை காரணமாக்க மாட்டேன் நான் .நமது நாட்டில் இன்னும் பெண்களை நிறத்தை அடிப்படையாக கொண்டு கேலியும் கிண்டலும் செய்வது அதிகளவில் இருக்கத்தான் செய்கிறது .அது உன் போன்ற பெண்களின் மனதை எந்த அளவு பாதிக்கிறது என்பதை இன்று தெளிவாக புரிந்துகொண்டேன் .நம் இருவரின் அன்புக்குமிடையே இந்த நிறம் ஒருநாளும் வராது " என்றவன .

அவளை திருப்பி நிறுத்தி பின்னிருந்து அணைத்தபடி ,"அதோ பார் "என சுட்டினான் .

எல்லையில்லா குளிர்ச்சியை வாரி வீசியபடி வெள்ளை வெளேரென்று  ஜொலித்துக்கொண்டிருந்தது வான்நிலவு .

"பார்த்தாயா நிலவை ...எவ்வளவு வெள்ளை ...ஆனால் இடையில் கருவண்ணங்கள் இருக்கின்றன .கறையென்று பழித்தாலும் அவையில்லாத நிலவை கற்பனை பண்ண முடிவதில்லை .வெண்ணிலவாய் நானிருந்தால் எனை நிறைக்கும் கருவண்ணமாய் நீ இருப்பாய் ".என்றான் நித்யவாணன் .

தன்னை முழுவதும் தனக்காகவே  ஏற்கும் கணவனின் அன்பில் கரைந்த எழில்நிலா அவன்புறம் திரும்பி கணவனை ஆரத்தழுவிக்கொண்டாள் .

நித்யனின் வானில் வெண்மை பரப்ப தயாராகிவிட்டது அந்த வண்ணநிலவு .

....நிறைவு...
                                                                 -பத்மா கிரகம் 

2 comments:

  1. சூப்பர் பத்மா

    ReplyDelete
  2. hi Padma ore moochana inniku padichuten. small story but the way you presented is poetic. I could guess he mentioned only his horse in 10th epi. but nithya vanan is very generous. definitely ezhil is very lucky to get a smart , lovable and successful businessman ......vannanilavu ( black and while) will give different colours of kutty nilas in their life.

    ReplyDelete

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll