Pages

Powered by Blogger.

வா என் வண்ண நிலவே - 12



சட்டென்று அவள் கன்னத்தில் ஒரு ஒளி அடித்தது.உள்ளே இறங்கி வந்தது நித்யனும் அவன் தங்கை சித்ராவும்....

கண்ணைக்கூட திறக்க முடியாமல் சோர்ந்து கிடந்த எழில்நிலா ,நித்யனை பார்த்ததும் ,நித்தி என அழைத்தபடி பறந்தோடி வந்து அவனை ஆர தழுவிக்கொண்டாள் .

எழில்நிலா வேகத்திற்கு சற்றும் குறைந்த வேகம் காட்டவில்லை நித்யவாணன் .

ஒருவராய் மாறி நின்ற இருவரை கண்ட சித்ரா  திருப்தியுடன் அண்ணனின் தோளை தொட்டு "அண்ணா முதலில் உங்க ரூமுக்கு போங்க "என்றாள் .

மூவரும் நிலவறையை விட்டு வெளியேறினர் .

நடக்க சிறிது தடுமாறிய எழில்நிலாவை தன் கைகளில் தூக்கி கொண்டான் நித்யவாணன் .

அறைக்குள் அவள் உடையை மாற்ற உதவியவன் வெதுவெதுப்பான பாலையும் சிறிது பழங்களையும் கொடுத்து அவளை ஆசுவாசம் செய்தான் .

அவனது செய்கைகளை விருப்புடன் ஏற்றுக்கொண்ட எழில்நிலாவுக்கு அதில் போலித்தனம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை .

எங்கோ ஏதோ தவறு நடந்திருக்கிறது .
இதோ இவனது பரிதவிப்பில் ,பரிவில் பொய்யில்லை .

என்னிடம் தான் தவறா ...என்ன என்று யோசனை செய்தாள் எழில்நிலா .

நாம் பிரிந்து விடுவதுதான் நல்லது என்று நினைக்கிறேன் ...

நித்யன் தான் ...அவன்தானா ஏன் இப்படி பேசுகிறான் .

குழப்பத்தோடு தன்னருகில் தெரிந்த அவன் பக்கவாட்டு முகத்தை நடுக்கமாய் நோக்கினாள் எழில்நிலா .
சொல்லவே விரும்பாதது போல்தான் அவன் நிலையும் இருந்தது .ஆனால் சொன்னான் .

"ஏன் அப்படி சொல்றீங்க ..."கேட்டு முடிப்பதற்குள் கண்ணீர் வழிய தொடங்கியது எழில்நிலாவுக்கு .

"உன் உயிரை விட உயா்ந்ததல்ல என் காதல் "என்றான் கசந்த குரலில்

என்னோடு வாழ்க்கையை தொடங்க விருப்பமில்லாமல் தானே நீ தற்கொலைக்கு முயன்றாய் ?கேள்வியாய் நோக்கினான் .

"ஐயோ இல்லை நித்தி என்னோட லெட்டர் பார்க்கலையா ..."

"என்ன லெட்டா்...?"

வேகமாக எழுந்து அறைக்கதவை திறந்து பார்த்தாள் .அங்கே சொருகப்பட்ட பூ அப்படியே இருந்தது .அதனை அவனிடம் நீட்டினாள் .

படித்து பார்த்தவன் ஆத்திரத்துடன் கசக்கி கீழே வீசினான் .

"அப்படி எதனால என்னை பிடிக்காம போச்சு ?"ஆத்திரத்துடன் வினவினான் .

எனக்கில்லை..உங்களுக்குத்தான் என்னை பிடிக்காம போச்சு..

எதற்கோ ?எகத்தாளமாய் வினவினான் .

ஏன்னா நான் ...நான் கறுப்பா இருக்கேனல அதான் ...குரல் தழுதழுத்தது .

என்னது ?ஏண்டி லூசாடி நீ ?...உனக்கெல்லாம் அந்த கடவுள் மண்டைல ஏதாவது வச்சிருக்கானா இல்லையா ? படபடத்தான் .

என்னது டீ யா ?முறைத்தாள் .

ஆமா இது மட்டும் உறைக்குது .உன்னை முதன் முதல்ல சந்திச்ச நாள்ல இருந்து உன்னை லவ் பண்ணிக்கிட்டு இருக்கேன் .எத்தனையோ தடவை பல வழிகள்ல அதை உனக்கு உணர்த்தியிருக்கேன் ...அதெல்லாம் உன் மர மண்டைல ஏறலை .டீ ன்னு சொன்னா மட்டும் கோபம் வருதாக்கும் ?...

முதல் முதல்ல சந்திச்ச நாள்லயிருந்து காதலிக்கிறேன்  ....இந்த வரிகளிலேயே நின்று விட்டது எழில்நிலா உள்ளம் .

மேலே நித்யன் பேசிய எதுவும் அவள் காதுகளில் விழவில்லை .

அவளிடமிருந்து எதிரொலி வராமல் போக தன் பேச்சை நிறுத்தி அவளை பார்த்தான் .இதுதான் சொர்க்கலோகமா ?..பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள்பார்த்துக்கொண்டிருந்தாள் எழில்நிலா ..பட்டென்று
அவள் கன்னத்தில் ஒன்று போடலாமென்று எழுந்த ஆவலை அடக்கி கொண்டு அவள் தோள்களை பற்றி குலுக்கினான் .


என்ன ...எந்த ...சந்திப்பை சொல்றீங்க ? நாம் பூங்காவில் சந்தித்ததை தானே ...

இல்லையென தலையாட்டினான் .

பிறகு ....அன்னைக்கு குதிரைல போகும் போது பார்த்தேனே அப்பவா

அப்பவே நீங்க என்னை பார்த்தீர்களா ...எனக்கும்  பார்த்த மாதிரி தோணுச்சு .என்னோட பிரமைன்னு நினைச்சு ...

இடைமறித்து அப்ப இல்லை என்றான் .

பிறகு ....

அதுக்கு ஒரு வாரம் முன்பு ரயில்வே ஸ்டேசன்ல வச்சு ....

எழில்நிலாவுக்கு ஞாபகம் வந்துவிட்டது .தனது பள்ளி கால தோழி ஒருத்தி கொடைக்கானல் வருவதால் அவளை வரவேற்று ஹோட்டலில் தங்க வைக்க வேண்டுமென பிடிவாதம் பிடித்து அதற்காக அதிகாலை ஆறு மணிக்கே குடும்பத்தினர் அனைவரையும் இழுத்துக்கொண்டு ஸ்டேசன் வந்திருந்தாள் சந்திரா .

அங்கே டிரெயின் ஒரு மணி நேரம் லேட் என்று ,அங்கேயே அமர்ந்து சித்தியின் சிறு வயது ஞாபகங்களை கேட்டு சித்தியையும் அவள் தோழியையும் அனைவருமாக கிண்டல் செய்து கொண்டிருந்தனர் .

அப்போதா ....

என் நண்பனுக்காக வந்தேன் .டிரெயின் லேட் என்றதும் போய்விட்டு திரும்ப வரலாமென நினைத்தவன் ,உன்னை பார்த்து விட்டேன் .

அப்படியே அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தபடி உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன் .

அன்று நீ பனிக்காக தலையை சுற்றி ஒரு ஸ்கார்ப் கட்டியிருந்தாய் .உன் முகத்தை எனக்கு முழு நிலவாக காட்டியது அது .

நான் என்னை அமாவாசையாக நினைத்து கொண்டிருக்கையில் இவன் பௌர்ணமி என்கிறானே ....

அவன் காதலில் அசந்து போய் நின்றாள் எழில்நிலா .

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll