Pages

Powered by Blogger.

சுமைகளின் கனம்

சுமைகளின் கனம்


கீழ் வானம் சிவக்கத்தொடங்கிய போதே 
இல்லாத வேலைகளுக்கான கனமொன்று 
நெஞ்சிலேறிக்கொண்டது .
சூரியன் முதல் சந்திரன் வரை 
நீண்டு கிடக்கிறது பொழுது
கனவுகளுக்கான ஏக்கம்
தூக்கமின்மையால் தூரப்போனது
நின்று கொண்டும்
நடந்து கொண்டும்
தூக்கம் ஆராய்கையில்
உயரப்பறக்கும் கனவொன்று
திறந்த விழியில்
வந்து போனது
குழலூதும் கண்ணனிடமிருந்து
சிறிது இடம்பெயர்ந்த மேகம்
நீருக்கு பதில்
கருமைகளை தூவிக்கொண்டு செல்ல
என் சுமைகளின் கனத்தை
காற்றிற்கு கடத்தி விட்டு
லேசாகி மிதக்க தொடங்குகிறேன்

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll