Pages

Powered by Blogger.

வா என் வண்ண நிலவே 9


மியூசிக்கல் சேர் விளையாட்டில் கடைசி ஆட்களாக நித்யவாணனும் எழில்நிலாவும் சுற்றிக்கொண்டிருக்க
மியூசிக் நிறுத்தப்பட்ட முதல் கணமே இருக்கையில் அமர்ந்த நித்யவாணன் அதே கணம் எழில்நிலாவையும் இழுத்து தன் மடி மீது அமர்த்திக்கொண்டான் .

நாங்கள் விளையாட்டில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஜெயிக்க பிறந்தவர்கள் என அறிவித்தான் .

கண் கலங்க கணவன் கழுத்தை கட்டிக்கொள்ள துடித்த தனது கரங்களை கஷ்டப்பட்டு கட்டுபடுத்தி கொண்டாள் எழில்நிலா .

சிறியவர்களோடு சேர்ந்து பெரியவர்களும் ஆர்ப்பரித்தனர் .

இவன தன் மீது பாசமில்லாதவனா ...நம்பவே முடியவில்லை எழில்நிலாவால் .

மீண்டும்.  பழைய சம்பவங்களில் ஆழ்ந்தாள் .

அன்று வருணின் துடுக்கு பேச்சிற்காய் அவனை கடிந்து கொண்டாள் சந்திரா .

வாடிப்போன மகளின் முகத்தை பார்த்தவள் மானசியையும் சேர்த்து கடிந்து கொண்டாள் .புரியாமல் எழில்நிலாவை ஏறிட்டான் வருண் .என்னக்கா ஒரு சின்ன கேலி இதுக்கு போயி இப்படி முகம் கோணுது உனக்கு என்றான் .

நல்லா வெள்ளை பூசணிக்கா மாதிரி இருக்கிற உனக்கும் உன் தங்கச்சிக்கும் இதெல்லாம் சின்ன கேலியாத்தான் தெரியுன்டா ...என மனதிற்குள் புழுங்கியபடி நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரவா சித்தி டிரைவரை கூட்டிட்டு போறேன் என்றாள் .

இன்று அனைவருமே வெளியே போக எண்ணிக்கொண்டிருந்த மஞ்சுளா ,எழில்நிலாவின் மனநிலையை எண்ணி ,அவள் தனிமையை விரும்பக்கூடும் என எண்ணி ,"சரிடாம்மா ...நீ கிளம்பு என்றாள் .

தலைக்காவேரியாய் எழில்நிலாவுக்குள் பொங்கிக்கொண்டிருந்த உணர்வுகள் ஆடு தாண்டும் காவேரியாக அமைதியாக ஓடத்தொடங்கியது .

முதல் நாள் எழில்நிலாவுக்கும் ,நித்யவாணனுக்குமிடையே ஒரு உற்சாக சம்பவம் நடந்திருந்தது .

குணா குகை பார்த்து விட்டு திரும்பும் வழியில் ,ஒரு சிறு மேட்டின் மேல் எழில்நிலா ஏற கை கொடுத்து தூக்கி விட்டவன் ,மென்மையாய் அவள் இடையையும் பற்றி மென்மையாக வருடினான் .

நடப்பதை தடுக்கும் வகையற்று கண்களை அகல விரித்து நித்யனின் கண்களுக்குள் ஊடுருவி வேண்டாமே ப்ளீஸ் என கண்களாலே வேண்டினாள் .

நெற்றியில் கிடந்த கலைந்த கூந்தலை ஒதுக்கிய நித்யன் ,அவள் மூக்கு நுனியை தன் ஆட்காட்டி விரலால் வருடியபடி நாளை உனப்கு ஒரு நல்ல செய்தி சொல்லப்போகிறேன் என்றான் .

புருவங்களை உயர்த்தி என்னவென வினவினாள் எழில்நிலா .

உனக்கும் பிடித்த செய்திதான் ,நீ எதிர்பார்த்துக்கொண்டிருந்ததும் கூட என்றான் .

அவள் கண்களை மேலும் அகற்ற போதும் போதும் கண்ணிலேயே என்னை விழுங்க பார்க்காதே ..நீ எப்படி பார்த்தாலும் அச்செய்தியை நாளைதான் சொல்வேன் என முடித்து விட்டான் .

அந்த செய்தியை கேட்கத்தான் இன்று காலையே இவ்வளவு உற்சாகமாக கிளம்பினாள் எழில்நிலா .அநேகமாக தன்னை காதலிப்பதாக சொல்லி மணக்க கேட்க போகிறான் நித்யவாணன் எனும் எண்ணம் அவளுக்கு .

ஆனால் வருணால சிறிது தன்னிலை உணர்த்தப்பட்டாள் .பளபளவென மின்னும் நிறத்துடன் ஒரு ஹீரோவின் வசீகரத்துடன் இருக்கும் நித்யவான்ன் மிக சாதாரண தோற்றத்துடன் இருக்கும் தன்னை எப்படி காதலிப்பான் .

ஆனால் மூன்று நாட்களாக அவன் பழகிய விதம் அப்படித்தானே இருந்த த்து .தனக்புள்ளேயே எண்ணியெண்ணி குழம்பியவள் நித்யவாணனை நேரில் சந்தித்து விட்டல் எல்லா குழப்பங்களும் தீர்ந்து விடு் என ஐநா ணி அவன் வீட்டிற்பே அவனை நாடி சென்னாள் .

வானையே புட்டிப்போடும் இடிகள் பலவற்றை ஒரு சேர எழில்நிலா வின் தலையில் இறக்கினான் நித்நவாணன் .

இந்த கறுத்த குட்டி சும்மா இங்க இருக்கிற வரை பொழுது போகந்தான்டா .சென்னைலதான் எனக்காக என் வெள்ளை தேவதை காத்துக்கொண்டிருக்கிறாளே என யாரிடமோ விவரித்துக் கொண்டிருந்தான்

என்னடா கிளம்பலாமா ?தந்தையின் குரலில் மீண்ட
எழில்நிலா "ம் " என தலையசைத்தாள்.

நித்யவாணனின் பூர்வீகம் சென்னைதான் .அவன் தந்தை கொடைக்கானலில் எஸ்டேட் வாங்கினார் .ஆனால் தொழில் வீடு என எல்லாம் கொடைக்கானலில் இருந்தாலும் சென்னையில் அமோகமாக நடக்கும் தொழிலை விட்டு வர முடியாமல் கொடைக்கானல் தொழிலை ஆள் வைத்து அவ்வப்போது வந்து பார்த்து கொண்டிருந்தனர் நித்யவாணனும் அவன் தந்தையும் .

இப்போது மறுவீட்டுக்காக சென்னை வரை போகாமல் கொடைக்கானலிலேயே ஏற்பாடாகி இருந்தது .

எழில்நிலா அவள் உறவினர்கள் சிலருடன் மறுவீடு கிளம்பினாள் .மறுவீடு சென்னையில்தான் இருக்குமென அவள் நினைத்துக்கொண்டிருந்தாள் .
கொடைக்கானலை நினைக்கவே அவளுக்கு பிடிக்கவில்லை .அதுவும் அந்த வீட்டுற்கு ...ம்ஹூம் அவளால் முடியுமென்று தோன்றவில்லை .

"என்ன.. அவ்வளவு ஆழ்ந்த யோசனை.." மீசை முடி காதை உரசும் அருகாமையில் கேட்டான் நித்யவாணன் .கார் கொடைக்கானல் மலையேறிக்கொண்டிருந்தது .

காரிலிருந்த பெரியவர்கள் சிறிது கண் அசந்திருந்தனர் ."ஒன்றுமில்லை" எனக்கூறியபடி அவனிடமிருந்து சிறிது நகர்ந்து அமர முனைந்தாள் எழில்நிலா .

ஒரு இஞ்ச் அவள் நகர மேலும் இரண்டு இஞ்ச் தான் நகர்ந்து அவள் மேல் ஒட்டிக்கொண்டான் நித்யவாணன் .கையை வேறு தோள்களை சுற்றி கார் சீட்டின் மீது வைத்துகொண்டவன் ,மிக தீவிரமாக அவள் புற சன்னல் பக்கம் குனிந்து வெளியே வேடிக்கை பார்க்கலானான் .

திணறிப்போனாள் எழில்நிலா .சிறிது முகம் உயர்த்தினாலும் அவள் இதழ்கள் பதியும் இடம் அவன் கன்னமாகத்தான் இருக்கும் .

"யாராவது பார்த்து விட்டால் ...ப்ளீஸ் கொஞ்சம் தள்ளுங்க" என்றாள் எழில்நிலா .

"பார்த்தா பார்க்கட்டுமே...இதோ நம்ம எஸ்டேட் எல்லை ஆரம்பமாக போகுது .அதைத்தான் பார்த்துக்கிட்டு வர்றேன்" என்றான் கூலாக .

கணவன் புறமாக உருகத்தொடங்கி விட்ட மனதை ,மீண்டும் இறுக்கமாக்கினாள் .

இல்லையில்லை நித்யனுடன் பேச வேண்டும் ,நிறைய பேச வேண்டும் தனது சந்தேகமெல்லாம் தீர்ந்த பிறகுதான் ....

என அவனுடனான தன் வாழ்க்கை ஆரம்பத்திற்கு ஒரு புள்ளி வைத்தாள் எழில்நிலா .

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll