Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 2



இரண்டு 


தட்டில் விழுந்த செக்கை அவசரமாக எடுத்து அருகில் வைத்தாள் சபர்மதி .

நான்தான் கோபத்தில் எறிந்தேன் ,நீ ஏன்டி அதை எடுத்து வைக்கலை எனும் பேச்சை பின்னால் கேட்க வேண்டி வரும் .

பயத்துடன் மெல்ல பெருந்தேவியை
ஏறிட்டாள் .பத்ரகாளியை ரூபத்தில் ப
கொண்டு நின்றிருந்தாள் அவள் .ஐந்து லட்சம் எதிர்பார்த்தவளுக்கு ஐம்பதாயிரம் அதிர்ச்சி தராதா ?

"என்னடி இதெல்லாம் ?"

அக்கா ...வந்து ...

"ஏய் நாயே ! அந்த பாலன் அன்னைக்கே படிச்சி படிச்சி சொன்னானே ...இந்த தா தையெல்லாம் வேண்டாம் ,ஒழுங்கா வெஸ்டர்ன் ஆடுவோம்னு ...கேட்டியா நீ ..."

"என்னமோ பெரிய பத்மா சுப்ரமணியம் ,சொர்ணமுகி ன்னு நினைப்பு உனக்கு ."

"வீட்டு நாய்க்கு தெருநாய் சப்போர்ட்டாம் ,அது மாதிரி உனக்கு அந்த கடங்காரன் சதிஷ் சப்போர்ட் "

"ஆடி முடிச்சு அள்ளிட்டு வருவோம்னு துள்ளிக்கிட்டு போனீங்களே ...என்னாச்சி இப்போ ?...வகையா ஆப்பு வச்சி அனுப்பிட்டாங்கள்ல "

வாய்க்கு வந்தபடி புலம்பிய பொருந்தேவியின் புலம்பல்களை உதடுகளை இறுக்க மூடியபடி கேட்டுக்கொண்டிருந்தாள் சபர்மதி .

கற்சிலை போல் உணர்ச்சியின்றி நின்று கொண்டிருந்தவளை கண்டதும் ,ஆவேசம் பொங்கியது பெருந்தேவிக்கு .

அந்த புது கழுத்தாரத்திற்கு நகைக்கடையில் சொல்லியெல்லாம் வைத்துவிட்டாளே .இந்த எருமை எப்படியும் ஆடி பரிசு வாங்கிடும்னு நினைத்தாளே ...இப்படி வெட்டியா வந்து நிற்பாள்னு நினைக்கலையே ..

கழுதை ...கழுதை ...இவளை மாதிரி தங்க நிறமும் ,வளைவான உடம்பும் ,நளினமான நடன அசைவுகளும் அவளுக்கிருந்தால் ,அவளே ஆட போய் விட மாட்டாளா ...

தன்னால் முடியாத காரியம் அதுவென்றுதானே இந்த அனாதை கழுதையை அழைத்து வந்து படிக்க வைத்து ,சோறு போட்டு ,நடனம் பயிற்றுவித்து ...எவ்வளவு செலவழித்திருக்கிறாள் ...

எல்லாத்தையும் கெடுத்துட்டு  கல்லு மாதிரி நிற்கிறாளே .இவளை ...இவளை ....

சபர்மதி தொட்டதற்கெல்லாம் அழும் ரகமில்லை .முன்பே  இது போன்ற பல வசவுகளை ஏற்கெனவே பெற்றிருந்ததாலும் ,இன்று கொஞ்சம் அதிகமாகவே இருக்குமென்று எதிர்பார்த்திருந்ததாலும் ,இதயத்தை மரத்து போக விட்டு கல்லாய் நின்றிருந்தாள் .

பார்க்க பார்க்க குரூரம் பொங்கியது பெருந்தேவியினுள் ...

இவள் அழவேண்டும் .தேம்பி ...தேம்பி ..குலுங்கி ...குலுங்கி ...

"எங்கேயோ பட்டிக்காட்டுல பின்கட்டுல பாத்திரம் தேய்ச்சிட்டு
இருந்திருக்க வேண்டியவா ...நான் போட்ட பிச்சைல இப்ப டிவில மினுக்கிட்டு இருக்கா "

தேள் கொடுக்கை சுழற்றி கொட்டுகிறது .

உடல் இறுக நிற்கிறாள் சபர்மதி .

அடுத்து பெருந்தேவி எங்கு வருவாளென தெரியும் .

சபர்மதியின் அன்னை தந்தையை இழுத்து, அவள் பிறப்பை பிடித்து தொங்கி ,சபர்மதியின் தாய் தமயந்தியின் ஒழுக்கத்தை விமர்சித்து ,தனது பத்தினி தன்மையை பறைசாற்றி அப்பப்பா ...

சபர்மதியின் தொண்டையிலிருந்து கேவல் எழுந்த பின்பே நிறுத்துவாள் .

தன் பொருட்டு தன் தாய் ஒவ்வொரு முறையும் தீக்குளிப்பதை சபர்மதி விரும்பவில்லை .

இதற்கு இன்று ஒரு முடிவு கட்ட வேண்டும் .

தலை நிமிர்நது "அக்கா "அதட்டினாள் .
திடுக்கிட்டாள் பெருந்தேவி .

என்ன அழுத்தமான குரல் .

"மனசுக்கு பிடித்தால்தான் எதையும் சரியாக செய்யமுடியும் .எனக்கு இந்த அரைகுறை ஆபாச நடனம் பிடிக்கவில்லை .இப்போது மட்டுமில்லை .இனி எப்போதும் நான் அதை செய்யப்போவதில்லை ."

"என்னைப்பற்றியோ அம்மாவை பற்றியோ இனிமேல் கண்டபடி பேசாமல் இருந்தால் கையிலிருக்கும் சீரியலை நடித்து முடிப்பேன் .இல்லையெனில் யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் ஏதாவது ஒரு ரயிலேறி எங்காவது சென்று விடுவேன் ஜாக்கிரதை "...ஆட்காட்டி விரலை ஆட்டி எச்சரித்து விட்டு தன்னுடைய அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள் .

ஆ"வென வாய் பிளந்தபடி அதே இடத்தில் நின்றாள் பெருந்தேவி .

சபர்மதி செய்து வைத்த சமையலை ஒரு கை பார்த்த அவள் பெற்ற செல்வங்கள் இரண்டும் அடுப்படியை விட்டு வெளியே வந்தனர் .

"அம்மா என்னாச்சி " பெருந்தேவியின் தோள்களை பற்றி உலுக்கினர் அவளது மகன்கள் .

தனது இரண்டு பக்கமும் நிற்கும் பத்தும் ,பதினைந்தும் வயதான  தனது பிள்ளைகளை பார்த்ததும் அவளுக்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது .

"சனியன்க இதுல ஒண்ணாவது பொண்ணா பொறந்திருந்தா ,இந்த சபர்மதி நாய்கிட்டெல்லாம் இவா பேச்சு வாங்க வேண்டியிருக்குமா ...

ஆத்திரத்தில் ஆளுக்கு ஒன்று போட்டாள் ."எனக்கு எதுக்காவது ஆவுறீங்களாடா நீங்க ...?தண்டசோறுங்களா ..ஓடுங்கடா என் கண் முன்னாடி நிக்காதீங்க .போங்க ...."விரட்டினாள் .

நழுவிக்கொண்டு வெளியே ஓடி மறைந்தனர் அவர்கள் .

மூடப்பட்ட அறைக்கதவை வெறித்தபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள் .

அவள கணவன் முத்தப்பா வந்த போது அவளுக்குள் புது திட்டமொன்று வடிவெடுத்திருந்தது .

முத்தப்பா உள்ளே நுழையும்போதே எங்கேடி அந்த கழுதை ...?என்று இரைந்தபடியேதான் நுழைந்தான் .

பெருந்தேவியின் செல்வமகன் வெளியிலேயே அவனிடம் விசயத்தை ஒப்புவித்திருந்தான் .

உஷ் !வாயில் விரல் வைத்து அவனை அடக்கினாள் பெருந்தேவி .

"சத்தம் போட்டு காரியத்தை கெடுத்திடாதே ...அவளை அடக்க நான் வேறு வழி வச்சிருக்கேன் "என்றவளின் குரலில் இருந்த குரூரம் முத்தப்பாவை வாயை மூட வைத்தது .
நினைத்து பார்க்க முடியாத பல திருப்பங்களுடன் மறுநாள் சபர்மதிக்காக காத்திருந்தது .





6 comments:

  1. ஐயோ ........பாம்புகள் ஏதோ விஷத்தைக் கக்க திட்டம் போடுதுகளே

    ReplyDelete
  2. விடுங்கக்கா நம்ம தேவதையை எந்த விசமும் ஒண்ணும் பண்ணாது

    ReplyDelete
  3. பத்மா ... செம விறு விறுப்பு

    ReplyDelete
  4. Padma....china thiraikul ippadi chitravathai siraiya.....sabarmathi,,,nee solvathe pol engavadhu alladu inda sirayai vittu veliyeru, unakana oru ulagam ange nichayam kaathirukum

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சாரதாக்கா , நம் தேவதை இந்த சிறையை விட்டு விரைவில் பறக்கத்தான் போகிறாள் . காத்திருங்கள்.கமெண்ட்சுக்கு நன்றிக்கா...

      Delete

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll