Pages

Powered by Blogger.

மிதிபடும் நிழல்கள்







மிதிபடும் நிழல்கள்


சீப்பில் எடுக்க மறந்த முடியாலும் 
இரண்டு கல் உப்பு குறைந்த குழம்பாலும் 
வெளிப்பட முடியாமல் தேங்கிக்கொண்டே போகிறது 
நம் காதல் ,
அதோ அந்த நீலப்பறவை இறகு வாங்கி 
உன் தோள்களில் ஏறி அமர்ந்து 
உன் கண்களை வாசிக்க முனைகிறேன் ,
சில சமயங்களில் 
ஈறு தெரிய நீ சிரிக்கும் தருணங்களில் 
ஏழுகடல் தாண்டி இளவரசியை காப்பாற்றிய 
என் சிறு வயது  ராஜகுமாரனை 
நினைவுறுத்துகிறாய் ,
உன்னுடன் அந்த வெண்புரவியில் 
ஏறிக்கொள்ள முனைகிறேன் 
இளவரசியாகி ,
எல்லையற்ற அவ்வான்வெளியில் 
எரிந்து கமறுகிறது 
எரிய துடிக்கும் ஓர் விளக்கு ,
கை பிடிக்காமல் கத்தரித்து விட 
நினைக்கிறாய் ,
ஏறி மிதித்து விட்டு செல்வதானால் செல் ,
உன் நிழலை நீயே மிதிப்பதில் 
உடைவதில்லை அது .


0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll