Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 5




"பாலன் "...அதட்டலாய் குரலை உயர்த்தினாள் சபர்மதி .

"நீங்க நிதானத்துல இல்லை .போங்க நாளைக்கு பேசிக்கலாம் "

"என்னடி பைனல்ல சொளையா இரண்டு லட்சம் வாங்கியிருப்பேன் .உன்னாலதான் அது போச்சுடி .இந்த நஷ்டத்தை நீதான் ஈடு கட்டனும் ."

"உளறாதீங்க நான் என்ன பண்ண முடியும் ...?"

"என்ன பண்ணலாம்னு சொன்னா செய்யுறியா ? சொல்லு செய்யுறியா ?
அவள் தோள்களை பற்றி உலுக்க தொடங்கினான் .

சிறிது பொறுத்து பார்த்த சபர்மதி சட்டென அவனிடமிருந்து உதறிக்கொண்டு பளாரென கன்னத்தில் அறைந்தாள் .

"ஏய் அவ்வளவு திமிராடி உனக்கு உன்னை என்ன பண்றேன் பாரு "கண் மண் தெரியாமல் அவளை நோக்கி தன் கைகளை வீச தொடங்கினான் பாலன் .

இந்த சத்தத்தில் பரபரவென கூட்டம் சேர தொடங்கியது .ஆங்காங்கே மற்ற படப்பிடிப்பில் இருந்த மற்ற ஆட்கள் அனைவரும் வந்து பாலனை பற்றி அடக்கினர் .

அடுத்த தளத்தில் படப்பிடிப்பில் இருந்த சதிஷ் ஓடி வந்தான் .அவனும் வேறு சில நண்பர்களுமாக சபர்மதியை அருகிலிருந்த அறைக்கு அழைத்து சென்றனர் .

"என்னம்மா பிரச்சினை ..? என்றாள் சங்கவி ..சக தோழி .

எல்லாவற்றையும் சொன்னாள் சபர்மதி ."ம்ம்ம் .."நீண்ட பெருமூச்சை வெளியேற்றினாள் அவள் .

"இங்க பாரு சபர் நம்ம தலையெழுத்து இங்க வந்து விழுந்துட்டோம் .இங்க வந்துட்டாலே கொஞ்சம் அப்படி இப்படி இருந்துதான் ஆகனும் "சங்கவி .

"அப்படி ...இப்படின்னா ..."கொதி பாலானாள் சபர்மதி .

"ஐயோ ...உன்னை சொல்லலப்பா ...உன்னை பத்தி எனக்கு தெரியாதா ?..பொதுவா நம்ம வாழ்க்கையை புலம்புறேன் .ஒரேடியா படுகுழிக்குள்ளேயே உன்னை விழ சொல்லலை .கொஞ்சம் தாராளமா ...ஐ...மீன் ...பரதம் ஆடுற கால் பரபரன்னு ஆடாதா ..?,

"உன்னோட உளறலை கொஞ்சம் நிறுத்துறியா ..?காட்டமானாள் சபர்மதி .

"உன் திறமை எனக்கு தெரியும்பா .நீ மட்டும் கொஞ்சம் விட்டுக்குடுத்திருத்தா சினிமா ஹீரோயினா ஆயிருக்கலாம் .ஆனா அது சாக்கடை .உன்னை போல பசுந்தங்கங்களுக்கு அங்கே இடமில்லை .ஆனால் சுத்த தங்கம் நகையாகாது .கொஞ்சமே கொஞ்சம்னாலும் கலப்படம் வேணும் .அது தங்கத்தை ஆபரணமாக்குமே தவிர அலங்கோலமாக்காது "
இது சண்முகவள்ளி .

அவள் இவர்களை விட சீனியர் .மூத்த நடிகை .

காதுகளை மூடிக்கொண்டாள் சபர்மதி .மென்மையாய் அவள் கைகளை எடுத்து விட்ட சங்கவி "உனக்கு கெட்டது சொல்லலப்பா ,இதை விட கெடுதி நடப்பதற்குள் விழித்து கொள் என்றுதான் கூறுகிறோம் "என்றாள்.

"அந்த பாலனுக்கு நம்ம எம்.டி வரை பவர் இருக்கு .இதை ஞாபகத்தில் வைத்துக்கொள் .வா சங்கவி "

ஆலோசனை என்ற பெயரில் நெருப்பை  அள்ளி அள்ளி சபர்மதி  தலையில் கொட்டி விட்டு சண்முகவள்ளியும் ,சங்கவியும் கிளம்பினர் .

சதிஷை திரும்பி பார்த்தாள் சபர்மதி .

தலையசைத்து ஆமோதித்தான் அவன் ."ஆமப்பா அவன் கொஞ்சம் பவர்புல் பெர்சன் தான் ."என்றான் .

"அதனால் நான் தலையாட்டி பொம்மையாகனுமா "ஆத்திரத்துடன் கேட்டாள் சபர்மதி .

"இல்லை அப்படி சொல்லலை .ஒரு நண்பனா நீ நிற்கிற இடத்தை உனக்கு புரியவைக்கிறேன் .அவ்வளவுதான .பீ கேர்புல் "

அவனும் சென்றுவிட்டான் .
மண்டை குழம்பியது சபர்மதிக்கு .என்னதான் சொல்கிறார்கள் ...?


முந்தானையோ முடிக்கற்றைகளோ 
அவிழ்த்தெறியவே 
அள்ளி முடியச்சொல்வது .
பாதுகாப்பென கூட்டிலுறங்கும் 
பறவைக்கூட்டம் பயந்தலரும் 
பாயும் திடீர் வெளிச்சத்தில் 
வெளிச்சத்தில் வெந்தபடி 
சரி செய்ய போகிறாளோ ?
சுடிதார் துப்பட்டாவை .

அன்னை தமயந்தியின் பழக்கம் சபர்மதிக்கும் .இக்கட்டில் கவிதை சொல்லி பார்ப்பது .

அடுத்த படப்பிடிப்புக்கான அழைப்பு வந்துவிட்டது கைப்பேசியில் .வேகமாக எழுந்து சென்று அந்த பட்ப்பிடிப்பையும் முடித்தாள் .
நடிக்கவே தெரியாத அந்த கதாநாயகி பெண்ணுக்காக இயல்பாக வந்த தனது உணர்ச்சிகளை சபர்மதி குறைக்க வேண்டியிருந்தது .

ஆயாசமாக வந்தது அவளுக்கு .சை ...இந்த கண்றாவியை எல்லாம் உதறிட்டு எங்காவது ஓடிப்போக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் .ஏக்கத்துடன் எண்ணிக்கொண்டாள் .

எண்ணியவுடனேயே அவள் நினைவில் வந்து புன்னகைக்கிறான் தீபக்குமார் .இல்லை இல்லையில்லை ...அவன் சரியானவன் கிடையாது .

சே ...தலையை உதறி அவன் நினைவை கலைத்தாள் .

அடுத்து ஒரு ரியாலிட்டி ஷோவுக்கான படப்பிடிப்பு இருந்தது .ஆனால் அது ஒனபது மணிக்குத்தான் .அதற்குள் வீட்டிற்கு போய் சிறிது ப்ரெஷ் ஆகி வருவோமென கிளம்பினாள் .

கைபேசி ஒலித்தது .அவள் வேலை பார்க்கும் சேனல் ஆபிசிலிருந்து .உடனே வந்து எம்.டியை சந்திக்கும்படி கூறப்பட்டது .

சிறிது பதட்டமானாள் சபர்மதி .ஏதாவது பிரச்சினை இல்லாமல் எம்டி யாரையும் சந்திக்க மாட்டாரே ?
பாலன் அதற்குள்ளாகவா வேலையை காட்டி விட்டான் .

நெற்றி வியர்வையை துடைத்தபடி 
தயக்கத்துடன் எம்டி அறைக்குள் நுழைந்தாள் சபர்மதி .

தனது ஐம்பத்தியைந்தை முப்பதாக்கும் பெருமுயற்சியில் இருந்தார் எம் டி சதாசிவம் .

"நீதானே ..."நவரசங்கள் " நிகழ்ச்சியில் தகராறு பண்ணினவா ..."கண்களை இடுக்கியபடி கேட்டார் .

அந்த நிகழ்ச்சியின் பேரில்தான் நவரசம் இருந்தது .அதற்கான உடைகளில் கையோ ,காலோ ,முதுகோ ,கழுத்தோ எதுவுமே இல்லை .ஆடைகளை விசிறியடித்து விட்டு அந்த நிகழ்ச்சியை செய்ய முடியாதென  வெளியேறினாள் சபர்மதி .

அதனை சமன் செய்யவே இந்த lநடன நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியதானது .அந்த நிகழ்ச்சிக்கு இது பரவாயில்லை என்றுதான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாள் சபர்மதி .

அந்த விசயம் எம் டி வரை போனதாகவே கேள்விப்பட்டாள் .

இப்போது ...

எச்சிலை அவஸ்தையாக விழுங்கியபடி ஒப்புதலாய் தலையசைத்தாள் சபர்மதி .

"பாலன் உன் மேல நிறைய கம்ப்ளெயின்ட் பண்றானே ...?"

"இல்லை சார் ..அவர்தான் குடிச்சிட்டு வந்து ...?"

"இதோ பார் உன் விளக்கம் எனக்கு தேவையில்லை .உன்னை மாதிரி நொய் நொய் ஆளுங்களை விட பாலனை மாதிரி எனக்கு வருமானம் தர்ற ஆளுங்கதான் முக்கியம் "
அவங்கிட்ட கொஞ்சம் மரியாதையா நடந்துக்கோ "

"...சார் "...

"எனக்கு வேலையிருக்கு. நீ போகலாம் " லேப்டாப் பக்கம் பார்வையை திருப்பி கொண்டது அது .
அதுதான் ...இதுக்கெல்லாம் என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு .அது ,இது ...எது ...ஐந்தறிவு ஜந்து ...மனதுக்குள் திட்டியபடி வெளியேறி ஆட்டோவை அழைத்து விட்டு நின்றபோது மீண்டும் அவள் வழி மறித்தான் பாலன் .





1 comments:

  1. kazhugu kootam vattamittu konde iruke sabarmathi. nee enga poka pore. innum inda idhathil irundhal kattyapaduthi unnai kuzhil thalli viduvargal. nee meendum neeyaka mudityadhu. edhavadhu sei penne. yaar anda Deepak kumar... oru nodi ninaithan meendum avanai puranthalinai.....ovuvelai avan unaku nichayamaka nalladu seivan enra; po poivedu sabarmathi

    ReplyDelete

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll