Pages

Powered by Blogger.

வா என் வண்ண நிலவே -- 4

கிட்டதட்ட இரவு முழுவதும் விழித்திருந்து விட்டு அதிகாலைதான் மிக

லேசாக கண்ணயர்ந்தாள் எழில்நிலா .


கறுப்பு குதிரை மீது வந்த வெள்ளை ராஜகுமாரனொருவன் சாலையில் நடந்து

 கொண்டிருந்த அவளை இடை பற்றி தூக்கி தன் அருகாமையில் வைத்து

கொண்டான் .

"என் வானை ஒளிர்விக்க வந்த வண்ணநிலவு நீ" என கொஞ்சியபடி

எழில்நிலாவை அணைத்தான் நித்யவாணன் .


எப்போது அந்த அரசகுமரன் நித்யவாணன் ஆனான் என குழம்பியபடி ,

"வண்ணமா நான் .."கிளி மொழியில் மிழற்றிபடி அவன் தோள்களில்

மாலையானாள் எழில்நிலா .


"ஆம் வெளிறிப்போன என் வாழ்க்கையின் புத்துணர்வு வண்ணம் நீ" என

பதிலளித்தபடி அவளுக்குள் புதைய தொடங்கினான் நித்யவாணன் .



எங்கிருந்தோ ஒரு இனிய கானமொன்று ஒலிக்க தொடங்கியது .

நேரம் செல்ல செல்ல கானத்தின் ஓசை கூட சட்டென விழிப்பு வந்தது

 எழில்நிலாவுக்கு .கனவா எல்லாம் சொல்லொணா ஏக்கத்தில் நிறைந்தது

உள்ளம் .


அவள் கைபேசி ஒலித்து கொண்டிருந்தது . எழில்நிலாவின் அம்மா மஞ்சுளா


தான் .தம்பதிகள் கிளம்பி சீக்கிரம் மண்டபத்துக்கு வரும்படி கூறினாள் .

தாய்க்கு உரிய பதிலளித்து விட்டு எழுந்து குளியலறைக்கு சென்றாள்
 .
குளித்து முடித்து அறைக்கதவை திறந்தவள் திகைத்தாள் .

ஹாலின் சோபாவிலேயே படுத்து எட்டாத கால்களை தொங்கவிட்டபடி

தூங்கியிருந்தான் நித்யவாணன் .அவனது நிலை சங்கடத்தை தர

அருகிலிருந்த டீப்பாயை இழுத்து அவன் கால்களுக்கடியில் வைக்க மெல்ல

 கால்களை தூக்கிய போது விழித்து கொண்டான் .



"உங்கள் வீட்டில் முதலிரவுக்கு மறுநாள்தான் காலில் விழுவீர்களோ...?"

என்றான் .


சுறுசுறுவென்று கோபம் வந்தது எழில்நிலாவுக்கு .


"உங்கள் வீட்டு பெண்கள் ஆண்களின் கால்களில் விழுந்து கொண்டே

இருப்பார்களோ ...?" என்றாள் வெடுக்கென்று .

"பெண்களை காலில் விழ வைக்கும் பத்தாம்பசலி குடும்பம் இல்லை என்னது"

 என்றான் நித்யவாணன் .


"நாங்கள் மட்டும் காலைப்பிடிக்கும் பத்தாம்பசலிகளோ ?" பதிலுக்கு

திருப்பினாள் எழில்நிலா .

"சீச்சி ..அப்படிபட்டவர்களில்லை காலை பிடிக்கும் பாவனையில் காலை

வாருபவர்கள் ..."பதிலடி கொடுத்தான் அவன் .


கண்கள் சிவந்தது எழில்நிலாவுக்கு ,"யாரை காலை வாருபவர்கள் என்கிறீர்கள்

?என் வீட்டாரையா ?..."ஆத்திரத்தில் ஆரம்பித்தாலும் கேள்வியை

முடிக்கும்போது குரல் கம்ம தொடங்கி விட்டது எழில்நிலாவுக்கு .


ஒரு நொடி இதழ்களை அழுந்த மூடி தன்னை கட்டுப்படுத்திய நித்யவாணன்

,"நான் உன்னை பற்றி மட்டுமே பேசுக்கொண்டிருக்கிறேன்.உன் குடும்பத்தார்

கால்களை வாருபவர்கள் இல்லை ..."என்றவன்

எழில்நிலா ஏதோ சொல்ல வாயை திறக்க கையுயர்த்தி தடுத்தவன் "நீ சொல்லி


உன் குடும்பத்தினரை உணர வேண்டிய நிலையில் நானில்லை "எனக்கூறி விவாதத்திற்கு முற்றுபுள்ளி வைத்தான்
.

அதே நேரம் மீண்டும் மஞ்சுளாவின் போன் ..கிளம்பிவிட்டார்களா எனக்கேட்டு ....


வந்துவிடுவதாக அன்னையிடம் கூறிவிட்டு ,"கட்டிலில் வசதியாக

படுத்திருக்கலாமே "என்றாள் எழில்நிலா .

"எந்த கட்டிலில் "என்றபடி அவளை கூர்ந்தான் நித்யவாணன் .


திணறிப்போனாள் எழில்நிலா ...இது அவளுடைய வீடு ...அவர்களுக்காக

இரவில் ஒதுக்கிய அறைக்குள் அவள் சென்று கதவடைத்து கொண்டாள்

.அவள் சுட்டாமல் வேறொரு அறைக்கோ இல்லை கட்டிலுக்கோ நித்யவாணன் செல்வதேது
 .


தன் தலையில் தானே கொட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது

எழில்நிலாவுக்கு .


"செய்த தப்புக்கு தானே தண்டனை கொடுத்து கொள்ளலாம் .அதிலொன்றும்

தவறில்லை "என்றான் நித்யவாணன் .

நான் நினைத்ததை இவன் எப்படி அறிந்தான் என விழித்தபடி ,"சாரி" என

முணுமுணுத்தாள் எழில்நிலா.


விரிந்த அவ்விழிகள் தன்னை நோகாமல் தின்பதை உணர்ந்த நித்யவாணனின்


பார்வை மாறியது .


ஆட்காட்டி விரலால் அவள் தாடையை தொட்டு முகத்தை உயர்த்தியவன்

மின்சாரத்தை அவள் விழிகளுக்குள் பாய்ச்சியபடி "எப்படி மன்னிக்க ...ம் .."என


 குரல் குழைய கேட்க ,

அளவற்ற மின்சக்தி வாங்கி எரியத்தொடங்கினாள் எழில்நிலா.


எழில்நிலாவின் இரு கன்னங்களையும் தன் கைகளால் பற்றியபடி அவள்

முகம் நோக்கி நித்யவாணன் குனிய புல்லாங்குழலின் நாதம் ஒன்று

இருவரிடையே நுழைந்தது .

இப்போது நித்யவாணனின் கைபேசி . மைனாவதி ...நித்யவாணனின் அன்னை .

விரைவில் கிளம்பி வரும்படி கூற ,தாக்குண்ட மின்சாரத்தால் சிலை போல்

நின்ற எழில்நிலா தோள்களை மென்மையாக பற்றி உலுக்கிய நித்யவாணன் "நாம் விரைவில் கிளம்ப வேண்டும்"என்றான் .


சுயநினைவிற்கு வந்த எழில்நிலா அவனுக்கு குளியலறையையும் மற்ற

விபரங்களையும் தெரிவித்து விட்டு ஒரு காபி கலக்கலாமென அடுப்படிக்குள்

நுழைந்தாள் .

காபி மேக்கருக்குள் போட்ட தூளை சுடுநீர் கரைப்பது போல் அவள் கரைந்து கொண்டிருந்தாள் நித்யவாணனால் .

அன்று அவ்வளவு அலட்சியமாக பேசியவன் இன்று எப்படி ...இப்படி

...ஆசையாக ....புரிந்து கொள்ள முடியவில்லை அவளால் .

ஆளரவமற்ற அண்டப்பெருவெளி 
ஐந்து தலை நாகமொன்றுடன் அவள் 
இடைவெளியற்ற ஆலிங்கனத்தில் 
விஷக்கொடுக்கை உள்மடக்கி 
வைத்ததொரு முத்தம் 
தலை சுற்றி நின்று 
மீண்டும் ஜீவிக்கிறாள் 
அடுத்தொரு முத்தத்திற்காய் ....

என்ற நிலையில் இருந்தாள் எழில்நிலா .

நித்யவாணனுக்கு காபியும் தனக்கு டீயும் கலந்து கொண்டு திரும்பிய போது

,குளித்து முடித்து அவள் பாதையை மறித்தபடி வந்து நின்றான் நித்யவாணன் .


நீட்டிய அவன் கைகளில் காபி கப்பை வைத்தவள் , தனது டீயை எடுத்து

கொண்டாள் .

"இதையா கேட்டேன் .."என சிறு அதிருப்தியுடன் காபியை வாங்கினான் .

பின்னே ..?எனக் கேள்வியுடன் நித்யவாணனை நிமிர்ந்து பார்த்தாள் எழில்நிலா .

பதில் சொல்லாது மேலும் அவளை நெருங்கி நின்று காபியை

பருகத்தொடங்கினான் .

கையிலிருக்கும் டீயை விழுங்க முடியாமல் தவித்து போனாள் எழில்நிலா

.பின்னால் நகரவும் மனமின்றி ,கன்னம் சுடும் மூச்சுக்காற்றை தள்ளவும்

மனமின்றி சில நிமிடங்கள் தவித்தவள் இறுதியில் அவன் நாசி காற்றின்

சுடுமூச்சையே தானும் சுவாசிக்க தொடங்கினாள் .

காபியை முழுவதும் குடித்து முடித்தவன்  பாதி கப் டீயை கையிலேயே

வைத்துக்கொண்டு முழித்துக்கொண்டிருக்கும் அவளை பார்த்து

புன்னகைத்தபடி தனது காலி கப்பையும் அவள் கை டீயையும் வாங்கி மெல்ல

அவள் மேல் சரிந்தபடி பின்னாலிருந்த மேடையில் வைத்தான் .

கப்பை வைத்த வலது கையால் அவளை மென்மையாக அணைத்தவன் இடது

கையால் அவள் முகம் நிமிர்த்தி குனிந்தான் .

மீண்டும் எழில்நிலாவை நித்யவாணன் விடுவித்த போது அவள் வாயில் காபி

மணத்தது .

சிவந்த கன்னங்களும் ,கனவு மிதக்கும் கண்களுமாக வெளியே கிளம்பியது

அந்த இளம்ஜோடி .

உனக்கான எழுத்துக்கள் மனக்குவளைக்குள் 
ததும்பி தளும்பிக் கொண்டிருக்கின்றன
சொல்லாய் கோர்க்கும்  வித்தையறியாது
சொற்பொழிவாற்றி கொண்டிருக்கிறேன் ஊருக்கு 
சில நேரங்களில் நீ 
சூரிய சிவப்பை இதழ்களில்
பூசிக்கொள்வதால்
சாம்பல் போர்த்திக்கொள்கின்றன 
அந்த எழுத்துக்கள் 
ஊதாங்குழலாய் இதழ் குவிப்பாயெனில் 
உதிர்ந்து வீழலாம் சில 
சேகரித்து கொண்டிரு அவற்றை 
கோர்க்க எனை தயாரித்து 
கொண்டு வருகிறேன் .

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll