Pages

Powered by Blogger.

வா என் வண்ணநிலவே - 6

தினம் ஒரு இடத்திற்கு அவளை ஊர் சுற்ற அழைத்து சென்றனர் சித்தி குடும்பத்தினர் .

சித்தி சித்தப்பா தம்பி வருண் ,தங்கை மானசி என அனைவரும் அவளுக்கு தங்கள் ஊரை சுற்றிக்காட்டுவதில் மிக சுவாரஸ்யமாக இருந்தனர் .

ஏதாவது ஒரு இடத்தில் எங்காவது தனது கனவு நாயகன் கண்ணில் படுகிறானா என அலசிக்கொண்டிருந்தாள் .

ம்ஹூம் ...நான்கு நாட்களாகி விட்டன .அவனை சந்திக்கவே இல்லை.
சூடாக சுட்டுக்கொண்டிருந்த சோளத்தை வாங்கி வர சென்றார் சித்தப்பா .

அங்கே வண்ண மலர்படுக்கையாக பரந்து படர்ந்திருந்த மலர்க்கூட்டத்துடன் தன்னையும் சேர்த்து செல்பி எடுக்கும் முயற்சியில் இருந்தாள் மானசி .

இன்று பூங்காவிற்கு அவர்கள் மூவருந்தான் வந்தனர் .வருணுக்கு ஏதோ பரீட்சை இருப்பதால் அவனும் ,சந்திராவும் வரவில்லை .

ஒருவேளை அன்று தான் கண்டது கனவோ என எண்ணியபடி பிரையண்ட் பூங்காவில் பூத்திருத்த மலர்கொத்துகளை வெறித்தபடி நின்றிருந்தாள் எழில்நிலா .

பந்துதான் என்றாலும் சற்று விசையுடன் எறியப்பட்டதால் அவள் முதுகில் பட்டவுடன் சிறிது வலிக்கத்தான் செய்தது .

ஏற்கனவே எரிச்சலில் இருந்தவள் பந்தெறிந்தவனை ஒரு வழி பண்ணிவிடும் நோக்கத்தில் திரும்பினாள் ,"ஐயோ வெரி சாரிக்கா தெரியாம பட்டுடுச்சி சாரி சாரி "என்றபடி வந்து அவள் கைபற்றிய மழலைகளை கண்டதும் எரிச்சல் மறைந்து புன்னகைத்தாள் .

ஐந்தும் எட்டுமாக வயது இருக்க கூடிய இரு தளிர்கள் .அண்ணனும் தங்கையுமாக....

மென்மையாய் புன்னகைத்து "இட்ஸ்
ஆல்ரைட் "எனக்கூறி அண்ணனின் கன்னத்தில் தட்டினாள் .

"வலிக்குதாக்கா .."எனக்கேட்டு அவள் முதுகை எட்டி தடவி விட எக்கினாள் அப்பெண்குழந்தை .அச்செய்கையில் மனம் குளிர்ந்துவிட மண்டியிட்டு அமர்ந்து அக்குழந்தையை அணைத்து முத்தமிட்டு "இல்லடா .."என்றாள் எழில்நிலா .

அதற்குள் "வல்லா.. ,கனி .."என அழைக்கும் குரலை கேட்டு "அம்மா கூப்பிடுறாங்க ..வர்றோம்கா" என ஓடி விட்டார்கள் குழந்தைகள் .

வல்லா ,கனி அழகான பொயர்கள் .இவற்றின் முழுவடிவு என்னவாக இருக்கும் என யோசித்தபடி மானசியை நோக்கி நடந்தாள் எழில்நிலா .
சோளத்தை ஒரு கை பார்த்து விட்டு ஓய்வாக தரையில் போர்வை விரித்தமர்ந்திருந்தனர் மூவரும் .சித்தப்பா சாருகேசி அப்படியே சிறிது கண்ணயர்ந்து விட ,திடீரென வந்த அவளது கல்லூரி தோழியுடன் ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்தாள மானசி .

சிறு சலசலப்பு அருகில் .என்னவென பார்த்தாள் எழில்நிலா .அதிர்ந்து போனாள் .எப்படி இது சாத்தியம் இத்தனை பேர் வந்து போகும் இடத்தில் .அவளால் நம்பவே முடியவில்லை .ஓரமாக ஒரு புதர் போன்ற அமைப்பிலிருந்த செடியில்  ஏராளமான பெயர் தெரியாத பூக்கள் மலர்ந்திருந்தன .

அதனருகில் உறைந்த நிலையில் அந்த சிறுபெண் .எழில்நிலா மேல் பந்து எறிந்தவள் .வல்லா அல்லது கனி ....அவள் முன் படமெடுத்தபடி ஒரு பாம்பு .

அந்த பெண்ணின் உறவினர்கள் பதட்டத்துடன் தள்ளி நின்றிருந்தனர் .அருகில் வர துடித்த சிறுமியின் தாயை கட்டுப்படுத்தி இழுத்துக் கொண்டிருந்தனர் இரு பெண் பூங்கா ஊழியர்கள் .

பார்வையை சுழற்றினாள் எழில்நிலா .சத்தமின்றி குழந்தையின் பின்புறமாக அணுகி குழந்தையை அணைத்து தூக்கி வந்துவிடலாமென எண்ணினாள் .

சத்தமின்றி மெதுவாக அருகே நகர்ந்தாள் .இதோ இன்னும் நாலே எட்டுகள்தான் ,குழந்தையை அணுகிவிடலாம் .அப்போது அந்த பாம்பு திடீரென தலையை திருப்பி எழில்நிலாவை பார்த்து சீற துவங்கியது .

கை கால் நடுங்க தொடங்கியது எழில்நிலாவுக்கு .அவ்வளவுதான,தனது வாழ்க்கை கணக்கு இங்கே முடிந்து விட்டது என முடிவே செய்து விட்டாள் அவள் .

அந்த நொடியிலும் தன் மனங்கவர்ந்த மன்னவனை சந்திக்காமலேயே போகிறோமே என்றிருந்தது எழில்நிலாவுக்கு .

அப்போது அவளது தோள்பட்டை அழுத்தமாக பற்றப்பட்டது ,தொடர்ந்து அவள் தனியே உருட்டி விட பட்டாள் .அதே நேரம் குழந்தையும் ஒரு கையில் அள்ளப்பட்டது .பாம்பு மீண்டும் அந்த புதருக்குள்ளேயே பதுங்கி விட்டது .

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் இத்தனை சம்பவங்களும் நடந்துவிட்டன .தனியாக போய் விழுந்த எழில்நிலா தள்ளியது யாரென நிமிர்ந்து பார்த்தாள் .

குழந்தையுடன் மற்றொருபுறம் உருண்டிருந்த அவன் ,எழுந்து குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைத்துக்கொண்டிருந்தான் .

மீண்டும் கண்களை கசக்கி விட்டு  பார்த்தாள் எழில்நிலா .அவனேதான் அந்த கறுப்பு குதிரை வெள்ளை தேவன்  .அவள் கனவு நாயகன் .
அவனைக்கண்டதும் எழ வேண்டுமென்ற எண்ணமின்றி மண்ணிலேயே விழுந்தபடியே கிடந்தாள் .

அவளிருந்த இடத்தை திரும்பி பார்த்தவன் ,அவளை நோக்கி வர துவங்கினான் .அவன் என்னை பார்த்தா வருகிறான் ,மெல்ல மெல்ல பெரிதாகி அவன் உருவம் தன்னை நெருங்குவதை பிரமை பிடித்தாற்போல் பார்த்துக்கொண்டிருந்தாள் எழில்நிலா .

அருகில் வந்தவன் சிறிது குனிந்து "என்னம்மா ..என்ன ஆச்சு" என விசாரித்தான் .மலங்க மலங்க விழித்தபடி அவள் அவனை பார்த்தாள் .குரலை மேலும் மென்மையாக்கி "வாங்க மேடம் ,என் கையை பிடித்துக் கொண்டு எழ முடிகிறதா பாருங்கள்" என கைகளை நீட்டினான் .

மிக சிறிய தயக்கத்துடன் தன் கரங்களை அவன் கரங்களில் வைத்தாள் எழில்நிலா .பூவால் வருடுவது போல் அவள் கைகளை பற்றியவன் மிருதுவாக அவளை தூக்கி நிறுத்தினான் .

சாருகேசியும் ,மானசியும் அருகில் வந்து விட்டனர் ."என்னம்மா எழில் என்ன ஆச்சு?" என விசாரித்தபடி அவளருகே வந்தார் சாருகேசி ...மானசி
எழில்நிலாவின் கை கால்களை ஆராய்ந்து "அடி ஒண்ணும் படலியே "என கவனித்தாள் .

"அவுங்களுக்கு அதிர்ச்சிதான் நினைக்கிறேன் . அடிபடெல்லாம் வாய்ப்புகள் இல்லை "என கூறிய நித்யவாணனை ஏறிட்ட சாருகேசி "ஹலோ நித்யன்! நீங்களா ?இங்க எங்க ?"என்றபடி கை குலுக்கினார் .

"நான் நண்பர்களுடன் வந்தேன் .இவர்கள் உங்க பொண்ணா" என கேட்டான் .

"பொண்ணு மாதிரிதான் .என் மனைவியின் அக்கா மகள் .லீவுக்கு வந்திருக்கிறாள்" என்றவர் ."அப்புறம் நித்யன் போன தடவை எனக்கு காபி விளைச்சல்..." என தொழில் சம்பந்தமாக பேசியபடியே சற்று தள்ளி அழைத்து சென்றார் .

அலட்டல் ஏதுமற்ற அவனது நேர் நடையை பின்னிருந்து ரசித்துக் கொண்டிருந்தவளின் முழங்கையில் தன் கையால் இடித்தாள் மானசி .
"ஏய் அக்கா ..அப்பா நல்லா தூங்கிட்டாரு .அவருக்கு நடந்தது எதுவும் தெரியாது .சும்மா கீழ விழுந்திட்டன்னு நினைத்துக் கொண்டிருக்கிறார் .நீ இன்னைக்கு பண்ண வேலை மட்டும் அம்மாவுக்கு தெரிஞ்சது ,உடனே உங்க அம்மாவுக்கு போன் பறக்கும் .நீ நாளைக்கே ஊருக்கு பேக்கிங் தான்" என்றாள்

திக்கென்றது எழில்நிலாவுக்கு உடனே ஊருக்கு போய் விட்டால் மீண்டும் அவனை பார்ப்பதேது .

"மானு ..மானு ..ப்ளீஸ்டி சித்திகிட்ட சொல்லாதேடி ..என் செல்லமில்ல" என சித்தி மகளை கெஞ்ச தொடங்கினாள் எழில்நிலா .

"அம்மாடி வாங்கடாம்மா போய் ஒரு காபி சாப்பிட்டு வரலாம் "என அங்கிருந்தபடி அழைத்தார் சாருகேசி .
எழில் நித்யனை நோக்கினாள் .கையில் இருந்த செல்போனை நோண்டிக்கொண்டிருந்தான் .

நித்யனுடன் காபியா ....ஆவலுடன் மானசியின் கையை பற்றியபடி அவர்களை அணுகினாள் எழில்நிலா .
அவர்கள் இருவரும் அருகில் வருமுன் நடக்க தொடங்கியிருந்தான் நித்யவாணன் .

முகம் சுண்டிப்போனது எழில்நிலாவுக்கு .தான் இருக்கும் பக்கம் கூட திரும்ப மாட்டேன் என்கிறானே என வருந்தினாள் அவள் .

ஹோட்டலில் சாப்பிடும் நேரம் முழுவதும் அப்படித்தான் அவன் பார்வை முழுவதும் சாருகேசியிடமே இருந்தது .ஏதேதோ பிசினஸ் சமாசாரங்கள் பேசினர் இருவரும் .

தட்டிலிருந்த சமோசாவை மெல்ல முடியாமல் எழில்நிலா தவித்துக்கொண்டிருக்க நித்யவாணனும் சாருகேசியும் உண்டு முடித்து விட்டு கை கழுவ எழுந்து விட்டனர் .

பின்னாலேயே மானசியும் சென்று விட அவசரமாக சமோசாவை ஒதுக்கினாள் எழில்நிலா .

சாருகேசியும் மானசியும் கை கழுவி விட்டு வந்தமர்ந்து பில்லுக்காக காத்திருக்க ,நித்யவாணனை காணவில்லை .

கண்களால் அவனை தேடியபடி கை கழுவிக்கொண்டிருத்தவள் "இப்படித்தான் அந்த பாம்பு முன்னால திடீரென்று வருவதா ?"என்ற கண்டிப்புடன் கூடிய கரிசனக்குரலை ஆச்சரியமாய் பார்த்தாள் .

வான் நிலவு தரையிறங்கி
தன்னோடு கதைக்க
காணாமல் கிடைத்த
நவரத்ன புதையலென
வட்டநிலவை
விழியாய் சுமக்கிறாள்

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll