Pages

Powered by Blogger.

வா என் வண்ண நிலவே - 10

இதோ இந்த இடம்தான் இந்த படியில்தான் நின்றபடி அவள் நித்யன் உமிழ்ந்த நெருப்பு துண்டங்களை விழுங்க முடியாமல் தவித்திருந்தாள் .அன்றைய வேதனையை சற்றும் குறையாமல் தேகம் ,மனம் இப்போதும் உணர படியேற மனமின்றி வெறித்தபடி நின்றிருந்தாள் எழில்நிலா .

பின்னாலேயே வந்த நித்யவாணன் "என்ன ஓடிடலாம்னு பாக்குறியா ...விட மாட்டேன் வா ..."என்று அவள் தோள்களை சுற்றி கைகளை அழுத்தமாக போட்டு இழுத்தான் .

பொம்மையாய் உள்ளே நுழைந்தாள் எழில்நிலா .

விருந்து முடிந்ததும் கிளம்பினர்  எழில்நிலா வீட்டினர் .மகளை உச்சி முகர்ந்த மஞ்சுளா "கண்ணம்மா மாப்பிள்ளை வீட்டாளுங்க எல்லோரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்கடா ...நீ அவுங்களை அட்ஜஸ் பண்ணிக்கிட்டு போகனும் .."என ஆரம்பித்தாள் .

அம்மா பெரிய அறிவுரைக்கு தயாராகிறாள் என உணர்ந்த எழில்நிலா ,இப்போதைக்கு எந்த அறிவுரையும் கேட்கும் நிலையில் அவள் இல்லை எனவே சரிம்மா சரி என வேகமாக தலையை ஆட்டினாள் .

"ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே தலையாட்டுறத பாரு" என செல்லமாக மகள் தலையில் கொட்டியவள் "அடுத்த வாரம் நம்ம சண்முகம் மாமா பொண்ணு கல்யாணம் இங்க இருக்கில்ல .அதுக்கு வரும்போது உன்ன வந்து பார்க்கிறோம் நீதான் இனிமே இங்கதான இருக்க போற" என சத்தமில்லாமல் பெரிய குண்டை தூக்கி மகள் தலையில் போட்டாள் .

"என்னம்மா சொல்றீங்க.." குரல் நடுங்க கேட்டாள் ."அதாம்மா மாப்பிள்ளையோட அம்மாவும் அப்பாவும் இனி இங்கதான் தங்க போறாங்களாம் .நீயும் அவுங்க கூட இங்கதான் இருக்க போற .மாப்பிள்ளை மட்டுந்தான் சென்னை தொழிலை பார்க்க  போய் வந்து இருக்கப்போறாரு  இது உனக்கு தெரியாதா ?"என்றார் மஞ்சுளா .

"மாப்பிள்ளை சொல்லலியா.." என சிறு யோசனையுடன் கேட்ட மஞ்சளா ,சட்டென தெளிந்து "அது சரி நேத்து உங்களுக்கு இதையெல்லாம் பேச நேரம் இருந்திருக்காது "என ரகசிய சிரிப்புடன் சொல்லிக்கொண்டாள் .

புரியாத பல குழப்பங்கள் இப்போது நேர்கோட்டுக்கு வந்து விட்டது  எழில்நிலாவுக்கு .

இங்கே வரும்போது மனைவி என்ற பெயருக்கு ஒரு பெண் .சமூகத்திற்காக ...ஒரு தலையாட்டி கறுப்பு பொம்மை .

சென்னையில் அவனுக்காக காத்திருக்கும் அவனுடைய வெள்ளை தேவதை .

இந்த இரட்டைவாழ்வுக்காகத்தான் நித்யன் அவளை தேடி வந்து மணந்திருக்கிறான் .

கண்களை இருட்டிக்கொண்டு வர சட்டென்று அருகிலிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள் .

விருந்தினர்கள் அனைவரும் செல்லவும் வெறிச்சோடியது வீடு .மணமகன் வீட்டில் இன்று இரண்டாவது இரவு .

அதற்காக எழில்நிலாவை அலங்கரிக்க வந்தனர் நித்யவாணனின் உறவினப்பெண்கள் .

"ஏன்க்கா துணைபட்டுக்கு இந்த கலரை எடுத்திருக்காங்க ,இது பொண்ணை இன்னும் கொஞ்சம் கறுப்பால்ல காட்டும்" என்றாள் உறவினப்பெண்ணொருத்தி ...

"அட நீ வேற இந்ந்ந்....த நேரத்துல  நம்ம மாப்பிள்ளை தம்பிக்கு பொண்ணோட கலரா கண்ணுக்கு தெரியப்போகுது ...."என கேலியுடன் சிரித்தாள் இன்னொருத்தி .

சாதாரண கேலிதான் .எல்லா புது மணப்பெண்ணும் எதிர்கொள்ள வேண்டிய கேலிதான் ...ஆனால் எழில்நிலா சாதாரணமாக இல்லையே .

எதிர்கால வாழ்க்கை பற்றிய அச்சத்தில் இருந்தவளை மேலும் அச்சுறுத்தியது இக்கேலி .

"எனக்கு தலை வலிக்குது நீங்கெல்லாம் கொஞ்சம் போறீங்களா" என்றாள் பட்டென்று .

முகம் மாறியது அப்பெண்களுக்கு ."இந்தாம்மா.." என வேகமாக ஆரம்பித்தாள் அவர்களுள் சற்று மூத்த பெண் .

"நேற்றிலிருந்து எழிலுக்கு கொஞ்ச நேரம் கூட ஓய்வு இருந்திருக்காது .அந்த டென்சன்லதான் இப்படி பேசியிருப்பா .நீங்க எல்லாரும் போய் சாப்பிடுங்க ...மத்ததை நான் பார்த்துக்கிறேன்" என அவர்களை அனுப்பினாள் நித்யனின் தாய் .

"இங்க பாரும்மா எழில்நிலா அவுங்க நம்ம விருந்தாளிங்க ,நம்ம மனசுல எவ்வளவு டென்சன் இருந்தாலும் அதையெல்லாம் அவுங்ககி்ட்ட காட்டக்கூடாது ,இப்ப என்ன நீ சாப்பிட வர்றியா ?அப்புறமா சாப்பிட போறியா ?.."என்றாள்.

மாமியாரின் கறாரான பேச்சில் கண்கலங்கி விட்டது எழில்நிலாவுக்கு .

இந்த அம்மா என்ன இப்படி பேசுறாங்க ?இவுங்க கூடவே எப்படி என்னால் இருக்க முடியும் என கலக்கத்துடன் எண்ண தொடங்கினாள் எழில்நிலா .

தளர்ந்து கட்டில் மேல் அமர்ந்தவள் எதிரில் நிழலாட நிமிர்ந்தாள் .நித்யவாணன் தான் ....அலங்காரத்தில் தேவதையாய் நின்றிருந்தவளை விழுங்குவது போல் பார்த்தான் .

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll